dinamalar telegram
Advertisement

சிறுத்தையை பிடிக்க கூண்டு: வனத்துறை தீவிர கண்காணிப்பு

ADVERTISEMENT
ஆனைமலை:ஆனைமலை, காளியாபுரம் மற்றும் ஆழியாறு புளியங்கண்டி பகுதிகளில், மூன்று மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. கடந்த மாதம், 1ம் தேதி காளியாபுரம் விவசாயி தேவராஜ் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, இரண்டு வயது கன்றுக்குட்டியை கொன்றுள்ளது. நேற்று முன்தினம், காளியாபுரம் பெரியணை கால்வாய் அருகே விவசாயி முருகேசன் தோட்டத்தில், மாடு ஒன்றை சிறுத்தை கொன்றது.இதேபோல், புளியங்கண்டி அருகே ஏப்., 5ம் தேதி தோப்பினுள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கொன்றது.
மூன்று நாட்களுக்கு முன் அதேபகுதிக்கு வந்த சிறுத்தை, மற்றொரு நாயை கொன்றது. காளியாபுரம் மற்றும் ஆழியாறு பகுதியில் வனத்துறையினர், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், பொன்னாலம்மன்துறை மற்றும் காளியாபுரத்துக்கு இடைப்பட்ட இடத்தில், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். பணியாளர்கள் அடங்கிய குழுவை நியமித்து, தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.வயது முதிர்வால் வேட்டையாட முடியாமல், குடியிருப்புகளில் நாய், மாடு, ஆடுகளை வயதான சிறுத்தை வேட்டையாடுகிறதா என்ற கோணத்தில் கண்காணிப்பு மேற்கொள்கின்றனர். சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். புளியங்கண்டி பகுதியிலும் கூண்டு வைத்து கண்காணிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement