dinamalar telegram
Advertisement

பாகற்காய் ரூ.10க்கு வாங்கி 40க்கு விற்பனை: விலையை குறைத்து நிர்ணயிப்பதற்கு கண்டனம்

ADVERTISEMENT
பொள்ளாச்சி;'பொள்ளாச்சியில், பந்தல் காய்கறி விவசாயிகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக,' ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.பொள்ளாச்சி, அம்பராம்பாளையம் சுங்கத்தில் பந்தல் காய்கறி சாகுபடி விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.பந்தல் காய்கறி விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்துதல், காய்கறிகள் கொள்முதல் செய்தல் மற்றும் அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து, 'வாட்ஸ்ஆப்' குழு உருவாக்குதல் உள்பட பல்வேறு பிரச்னைகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. பந்தல் காய்கறி விவசாயிகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
பந்தல் காய்கறி விவசாயிகள் கூறியதாவது:பொள்ளாச்சி, ஆனைமலை, திம்மங்குத்து, வேட்டைக்காரன்புதுார், பூசாரிப்பட்டி, கிணத்துக்கடவு, செஞ்சேரிமலை உள்ளிட்ட பகுதிகளில் பந்தல் காய்கறிகளான பாகற்காய், பீர்க்கன், புடலை, சுரைக்காய் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.பொள்ளாச்சி பகுதியில் மட்டும், இரண்டாயிரம் ஏக்கரில் பந்தல் காய்கறிகள் சாகுபடி பரப்பு உள்ளது. இதில், 600 முதல், 700 விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியில் பாகற்காய் கிலோ, 10 ரூபாய்க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஒட்டன்சத்திரத்தில் கிலோ, 15 ரூபாய் வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.பாகற்காய் கிலோவுக்கு உற்பத்தி செலவு, 15 ரூபாய் வரையாவதால் நஷ்டம் ஏற்படுகிறது. விலை குறித்த விபரம், விவசாயிகளுக்கு தெரியாததால், வியாபாரிகள் கிலோ, 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, 40 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.

இடுப்பொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பந்தல் சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பதால், பந்தல் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.பந்தல் காய்கறிகள் குறித்த விலை அனைத்து விவசாயிகளுக்கு தெரிவதற்கு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, 'வாட்ஸ்ஆப்' குழு துவங்கப்பட்டு தினமும் காய்கறிகள் விலை விபரம் குறித்த தகவல்கள் பதிவு செய்யப்படும்.ஒட்டன்சத்திரம் போன்ற மார்க்கெட்டுகளில் விலை விபரத்தை கேட்டு, இங்கும் விலை நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement