வாகன சோதனையில் கஞ்சா பறிமுதல்
அண்ணா சதுக்கம்:வாகன சோதனையின் போது, சாலை விதிமீறிய நபரை பிடித்து விசாரித்ததில் 1 கிலோ கஞ்சா சிக்கியது.
அண்ணா சதுக்கம், காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலை அருகே, நேற்று திருவல்லிக்கேணி போக்குவரத்து போலீசார், சாலை விதி மீறுவோரின் வாகனங்களை நிறுத்தி சோதனை யிட்டனர்.
அண்ணா சதுக்கம், காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலை அருகே, நேற்று திருவல்லிக்கேணி போக்குவரத்து போலீசார், சாலை விதி மீறுவோரின் வாகனங்களை நிறுத்தி சோதனை யிட்டனர்.
அப்போது, திருவல்லிக்கேணி, பி.எம்., தர்கா தெருவைச் சேர்ந்த அரவிந்தன், 24, என்பவர் 'யமஹா' இரு சக்கர வாகனத்தில் வந்தார்.சாலை விதி மீறியதாக, போலீசார் அவரது இரு சக்கர வாகனத்தை மடக்கி விசாரித்தனர். அவரிடம் ஆர்.சி., புத்தகம் கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.சந்தேகம் அடைந்த போக்குவரத்து போலீசார், அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் அரவிந்தனை ஒப்படைத்தனர்.
போலீசாரின் சோதனையில், அவரது இருசக்கர வாகனத்தில் இருந்து 1 கிலோ கஞ்சா சிக்கியது.கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அரவிந்தனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!