கிண்டி தொழிற்பேட்டைக்கு பட்டாதொழில் நிறுவனங்கள் மகிழ்ச்சி
கிண்டி, சிட்கோ தொழிற்பேட்டை 1958ம் ஆண்டு துவக்கப்பட்டது. மொத்தம், 404 ஏக்கர் பரப்பு கொண்டது. இதில், 14.4 கி.மீ., நீளத்தில், 83 தெருக்கள் உள்ளன. இங்கு, 550க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.சிட்கோ வளாக நிலம், ரயத்துவாரி மற்றும் அரசு நிலம் என்ற வகைகளில் உள்ளன.
இதில், ரயத்துவாரி நிலத்திற்கு, பல ஆண்டுக்கு முன் பட்டா வழங்கப்பட்டது. அரசு நிலத்திற்கு பட்டா வழங்காததால், வங்கி கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்தன.இந்த நிலையில், அரசு இடத்திற்கு பட்டா வழங்க, இரு தினங்களுக்குமுன், தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கு, தொழில் நிறுவனங்கள் மகிழ்ச்சி தெரிவித்தன.
இது குறித்து, தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:தொழில் துவங்க அரசு நிலம் வழங்கியது. ஆனால், வகை மாற்றம் செய்யாததால், பட்டா வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.இதனால், பெயர் அளவுக்கு தான் வங்கி கடன் கிடைத்தது. பட்டா கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளோம்.
தற்போது, பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப் பட்டு உள்ளது. இதையடுத்து, நிலத்தின் மார்க்கெட் விலையை கணக்கில் வைத்து, வங்கி கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் வாயிலாக, தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!