dinamalar telegram
Advertisement

பிளாஸ்டிக் குழாயில் வடிகால் அமைக்க வேண்டும்

அடையாறு மண்டலம், 174வது வார்டு, பெசன்ட் நகர் 4வது குறுக்கு தெருவில், மழைநீர் வடிகால் கட்ட பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால், வீட்டில் இருந்து வெளியே வரமுடியவில்லை. முதியவர்கள், வீட்டில் முடங்கி உள்ளனர்.

பள்ளம் தோண்டும்போது, தொலைத்தொடர்பு கேபிள்கள் துண்டிக்கப்பட்டன. இதனால், 15 நாட்களாக தொலைபேசி இயங்கவில்லை. பிற மாநில இளைஞர்கள் பணி புரிவதால், அவர்களிடம் பிரச்னையை எடுத்து கூற முடியவில்லை.அதிகாரிகளும், பணி தளத்தில் இருப்பதில்லை. வடிகால் கட்டமைப்பு, தவறான முறையில் கட்டமைக்கப்படுகிறது. சாலை மட்டத்தை விட உயரமாக கட்டப்படுகிறது.

மக்கள் தொகை, மழைநீர் தேக்கத்தை கணக்கில் கொண்டு, வடிகால் கட்டவில்லை. கட்டமைப்புக்கு பதில், பிளாஸ்டிக் குழாய் பதித்து வடிகால் அமைக்கலாம்.பல உலக நாடுகளில் இது நடைமுறையில் உள்ளது. செலவும், பணி நாட்களும் குறைவு. மாநகராட்சி உயர் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
-என்.எஸ்.வெங்கட்ராமன், பெசன்ட்நகர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement