ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அலட்சியம்; விவசாயிகள் புகார்
அன்னுார்:'ஊத்துப்பாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் வருவாய்த்துறை அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.கஞ்சப்பள்ளி ஊராட்சி, ஊத்துப்பாளையத்தில் பிரதான் மந்திரி இணைப்பு சாலையில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து அன்னுார் தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தாலுக்கா நில அளவையாளர்கள் நில அளவை செய்து ஆக்கிரமிப்பை உறுதி செய்தனர்.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பிறகு ஐந்து மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றி மறுபுறம் உள்ள விவசாயிகள் விளை பொருட்களை தடையில்லாமல் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், 'ஆக்கிரமிப்பை அகற்ற போராடி வருகிறோம். பலமுறை மனு கொடுத்து விட்டோம். வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய பிறகும், ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அலட்சியம் காட்டுகின்றனர்,' என்றனர்.
தாசில்தார் சிவக்குமார் கூறுகையில், "ஆக்கிரமிப்பு பாதையில் உள்ள மரங்களை அகற்றிக்கொள்ளவதாக ஆக்கிரமிப்பாளர்கள் கூறியுள்ளனர்,மரங்களை அகற்ற ஆர்.டி.ஓ.,விடம் அனுமதி பெற வேண்டும். ஆர்.டி.ஓ., வுக்கு இது குறித்து கடிதம் அனுப்பி உள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் இந்த பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்," என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!