dinamalar telegram
Advertisement

மெட்ரோ பயணியரிடையேசுகர் பாக்ஸ் செயலி பிரசாரம்

ADVERTISEMENT
சென்னை:மெட்ரோ ரயில் பயணியர் 'சுகர் பாக்ஸ்' செயலியை அதிகம் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, ஊழியர்களால் பிரசாரம் செய்யப்படுகிறது.
சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை, பரங்கிமலை - எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் நிலையங்கள் இடையே இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில், பயணியரின் வருகையை அதிகரிக்க, மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ரயிலில் பயணியர் பயண நேரத்தை எளிதாக ரசித்தபடி பயணிப்பதற்கு ஏதுவாக, இலவச 'வை பை' வசதியில், 'சுகர் பாக்ஸ்' செயலி, முன்பே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

' ஜீ 5' நிறுவனம் உட்பட, ஐந்து பிரபல நிறுவனங்களின் டிஜிட்டில் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், சீரியல்கள், பாடல்களை தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் செயலி வழியாக பார்த்து ரசிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.இச்செயலியின் சிறப்பு அம்சங்கள் குறித்து, பயணியரிடம் தெரிவித்து, ரயில் பயணத்தின்போது, பயணியர் இச்செயலியை அதிகமாக பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, சென்னை மெட்ரோ ரயிலில் உள்ள அனைத்து நிலையங்களிலும், நேற்று முதல், தலா இரண்டு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, பயணியரிடம், செயலியின் சிறப்பு அம்சங்கள் பற்றி பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ

    தம்போலா ஆடலாமே

Advertisement