dinamalar telegram
Advertisement

உதய்பூர் டெய்லர் கொலையாளிகளின் மொபைல்போன் தகவல்கள் ஆய்வு

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் ஒருவரை தலை, துண்டித்து கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்டவர்களின் 'மொபைல்போன்'களில் பதிவாகிஉள்ள தகவல்களை முழு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

'வீடியோ'ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள உதய்பூரைச் சேர்ந்த டெய்லர் கன்னையா லால், சமீபத்தில் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இதை, 'வீடியோ'வாக பதிவு செய்து, கொலையாளிகள் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.முஸ்லிம் மதத்துக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த பா.ஜ., முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுாபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததால், கன்னையா லாலைக் கொலை செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

வீடியோவில் உள்ள ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுஉள்ளனர். இவர்களுக்கு உதவியதாக, மோஷின், ஆசிப் என்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து, நான்கு பேரின் மொபைல்போன்களை முழுமையாக ஆய்வு செய்ய, என்.ஐ.ஏ., அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இணையதளம்ஐ.பி.டி.ஆர்., எனப்படும் இணைய விபர பதிவுகள் பரிசோதனை செய்யப்பட உள்ளன. இதன் மூலம் அவர்கள் எந்தெந்த இணையதளங்களை பார்த்தனர்; யார் யாருடன் தொடர்பு கொண்டனர்; பகிர்ந்த தகவல்கள் என, அனைத்தையும் சேகரிக்க முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

 • பேசும் தமிழன் -

  இவர்களை போன்ற ஆட்கள்... நாட்டுக்கு பாரம்.. இதன் பின்னணியில் உள்ள பெரிய ஆட்களை பற்றிய விபரங்களை சேகரித்த பின்பு.. தப்பிக்க பார்த்தார்கள் என்று கூறி சுட்டு கொன்று விடுங்கள்.. ஜெயிலில் வைத்து பிரியாணி செலவு செய்வது வேஸ்ட்.. நீதிமன்றம் விடுதலை செய்தாலும் ஆச்சர்யம் இல்லை!!!

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  அவர்களுக்கு வரலாறு காணாத கொடுமையான தண்டனை கொடுக்க பட வேண்டும். தூக்கு தண்டனை பத்தாது.

 • krishna -

  SECULAR ENA SOLLI THIRIUM CONGRESS MAFIA MAINO KUMBAL INDHA NAATIN SAABA KEDU..

 • அப்புசாமி -

  பிடிபட்டவனில் ஒருத்தன் பா.ஜ ஐ.டி விங் ல வேலை பாக்குறானாம். டீ.வி ல சொல்றாங்க.

  • பேசும் தமிழன் -

   இத்தாலி ஆட்கள் அப்படி தான் சொல்வார்கள்... அப்படியே பிஜெபி யில் இருந்து இருந்தலும்.. உளவு பார்க்க வேண்டுமானால் இருந்து இருக்கலாம்!!!

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  கொலை செய்தவர்களே உண்மையை ஒப்புக்கொண்டபின் இதெல்லாம் தேவையா? இப்படி நாட்களை தள்ளிக்கொண்டே போனால், அவர்கள் பிறகு தடயங்களை அழித்துவிட்டு, கொலையே செய்யவில்லை என்று கூறி தண்டனையிலிருந்து தப்பித்து விடுவார்கள். ஏன் நமது நீதிமன்றங்கள், காவல் துறையினர் இப்படி 'மந்தமாக' செயல்படுகிறார்க்ளோ...?

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

   நீதிபதிகள் காலை நடைப்பயிற்சி செய்யும்போது நீங்க கியாரண்டி கொடுப்பீர்களா ????

  • Aarkay - Pondy,இந்தியா

   பின்னே இருந்து இயக்கியவர்களை நிச்சயமாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

  • Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ

   எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரி எல்லாத்துக்குள்ளும் மூக்கை நுழைக்கிறது சரியில்லை ..

Advertisement