ஜெகன்நாதர் தேர்த்திருவிழா கோவையில் கோலாகலம்
கோவை : அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் ஜெகன்நாதர் தேர்த்திருவிழா கோவையில் கோலாகலமாக நடந்தது.
கோவை கொடிசியா அரங்கம் அருகே உள்ள ஜெகன்நாதர் கோவிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப்பிறகு அலங்கரிக்கப்பட்ட ஜெகன்நாதர், பலதேவர், சுபத்ராதேவியர் பட்டாடைகள், ஆபரணங்கள், அணிகலன்கள், வண்ணகிரீடம் அணிவிக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க ராஜவீதி தேர்நிலைத்திடலுக்கு மதியம் 1:00 மணிக்கு இஸ்கான் பக்தர்களால் எழுந்தருளுவிக்கப்பட்டனர்.மாலை 3:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இஸ்கான் அமைப்பின் மூத்த தலைவர் பானு ஸ்வாமி மஹராஜ் மற்றும் மண்டல செயலர் பக்தி வினோத ஸ்வாமி மஹராஜ் சிறப்பு பூஜை செய்தனர். இதன் பின், அலங்கரிக்கப்பட்ட தேர் ராஜவீதி தேர்நிலைத்திடலிலிருந்து புறப்பட்டு, ஒப்பணக்காரவீதி, வைசியாள்வீதி, கருப்பகவுண்டர்வீதியை கடந்து மாலை 6:30 மணிக்கு மீண்டும் தேர்நிலையை அடைந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!