dinamalar telegram
Advertisement

திமுக ஆசியுடன் மணல் கடத்தல் : பா.ஜ., மாவட்ட தலைவர் குற்றச்சாட்டு



அன்னுார் : ''தி.மு.க., ஆசியுடன் மண் கடத்தல் நடக்கிறது,'' என, பா.ஜ.,கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

தி.மு.க., அரசின் செயல்பாட்டை கண்டித்து, கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் அன்னுார், ஓதிமலை ரோட்டில், வரும், 5ம் தேதி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்நடக்கிறது. பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில செயலாளர் சையத் இப்ராஹிம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், அன்னுாரில் நேற்று நடந்தது.
பின், பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா நிருபர்களிடம் பேசுகையில், ''தி.மு.க., ஆசியுடன், கோவை வடக்கு மாவட்டத்தில், தினமும் சட்ட விரோதமாக பல ஆயிரம் லோடு மண் கடத்தப்படுகிறது. அதிகாரிகள் இவற்றை கண்டுகொள்வதில்லை. 'ஜல் ஜீவன்' திட்டத்தில் மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இத்திட்ட விழாக்களில், மத்திய அரசு திட்டம் என்பதையும் பிரதமர் மோடி குறித்தும் தெரிவிப்பதில்லை. மத்திய அரசின் சாதனையை இருட்டடிப்பு செய்கின்றனர்,'' என்றார்.
கூட்டத்தில், மாவட்ட பொது செயலாளர்கள் சத்தியமூர்த்தி, சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட செயலாளர் ஜெயபால், வடக்கு ஒன்றிய தலைவர் திருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement