சட்டமன்ற ஏடுகள் குழு 5ல் கோவையில் ஆய்வு
கோவை : தமிழக சட்டமன்ற ஏடுகள் குழு, கோவை மாவட்டத்த்தில், வரும், 5ல் (செவ்வாய்க்கிழமை) ஆய்வு மேற்கொள்கிறது.
தி.மு.க., எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் தலைமையில், 10 உறுப்பினர்களுடன் சட்டமன்ற ஏடுகள் குழு செயல்படுகிறது. சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்வது இக்குழு பணி. வரும், 5ம் தேதி கோவையில் இரு முக்கிய பொருட்கள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.அதில், கோவை வேளாண் பல்கலையின், 2018-19ம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கையை, சட்டசபைக்கு கால தாமதமாக சமர்ப்பித்தது; 2019-20, 2020-21 ஆகிய ஆண்டுகளுக்கான தணிக்கை அறிக்கைகள் இன்னும் வைக்கப்படாதது குறித்து பல்கலை அதிகாரிகளுடன் விவாதிக்கின்றனர்.
இதேபோல், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில், 2013-14 முதல், 2019-20 வரையிலான, 6 ஆண்டுக்கான அறிக்கைகள் கால தாமதமாக வைக்கப்பட்டது. 2020-21ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை சமர்ப்பிக்காமல் இருப்பது குறித்தும், அந்நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்த இருப்பதாக, கோவை கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!