விளம்பர அரசாகத்தான் உள்ளது உ.உ.க., செல்லமுத்து காட்டம்
கோவை : 'தமிழக அரசு விளம்பர அரசாகத்தான் உள்ளது', என, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களிடம் செல்லமுத்து கூறியதாவது:
மின் கட்டண குறைப்பு மற்றும் கடன் நிவாரணம் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில், உயிரிழந்தவர்களுக்கு ஜூலை, 5 ம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கபட்டு வருகிறது. இவ்வாண்டு தொண்டாமுத்தூர் பகுதியில் அந்நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது.தூர்வாரப்படாத இடங்கள் அனைத்தையும் மழைகாலத்துக்கு முன் தூர்வார வேண்டும்.
தமிழக அரசு வெறும் விளம்பர அரசாகவே தான் உள்ளது.விவசாயிகளுக்காக பட்ஜெட் போடுவதாக கூறும் போது அதனை வரவேற்றோம். ஆனால், இதுவரை விவசாயிகளின் நிலத்துக்கு ஒரு ரூபாய் சலுகை கூட வரவில்லை.பம்புசெட் உற்பத்தியாளர்களுக்கு ஜி.எஸ்.டி., வரியை உயரத்தினால் அது விவசாயிகளுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு, செல்லமுத்து கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!