dinamalar telegram
Advertisement

பூக்கடைக்காரர் கொலை போதை ஆசாமி வெறி



சென்னை : சேலையூரில் பூக்கடைக்காரர் குத்திக் கொலை செய்யப்பட்டார். கொலையாளி, ரயில் நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்து வந்த போதை ஆசாமி என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

சென்னை, தாம்பரம் அடுத்த சேலையூர் காமராஜபுரம் பேருந்து நிலைய சாலையோரம் பூக்கடை நடத்தி வந்தவர் கோகுலன், 55.இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், 32, என்பவர், நேற்று இரவு பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த வினோத்குமார், கத்தி வாங்கி வந்து கோகுலன் மார்பில் சரமாரியாக குத்தி கொலை செய்து தலைமறைவானார்.தகவலறிந்து வந்த சேலையூர் போலீசார், உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், தலைமறைவாக இருந்த வினோத்குமாரை சுற்றிவளைத்து கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கின்றனர்.
'மிரட்டல்' நபர்
கைதான வினோத்குமார், ரயில் நிலையங்கள் மற்றும் முதல்வர் இல்லம் உள்ளிட்டவற்றிற்கு பலமுறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி என்பது குறிப்பிடத்தக்கது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement