dinamalar telegram
Advertisement

அலையில் சிக்கிமாணவர் பலி

சென்னை:குஜராத் மாநிலம் ஆமதாபாதைச் சேர்ந்தவர் அசோக் ஜெயின். இவரது மகன் ஹாரியன் ஜெயின், 20. இவர், சென்னை காட்டாங்கொளத்துார் பகுதியில், கிரீன் பேலஸ் என்ற இடத்தில் நண்பர்களுடன் தங்கியிருந்து, அங்குள்ள கல்லூரி ஒன்றில், பி.டெக்., முதலாம் ஆண்டு படித்தார்.
நேற்று காலை, நண்பர்கள் ஒன்பது பேருடன், ஹாரியன் மெரினாவுக்கு வந்தார். அனைவரும் நேதாஜி சிலை பின்புறம் உள்ள கடற்பகுதியில் குளித்தனர். அப்போது, அலையில் சிக்கி ஹாரியன் தத்தளித்தார்.அந்நேரம் படகில் வந்த மீனவர்கள், ஹாரியனை மீட்டு கரை சேர்த்தனர். ஆனால், அவர் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தார். உடனடியாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement