dinamalar telegram
Advertisement

கோவில் திருவிழா வழக்கு போனில் பேசி நீதிபதி தீர்வு

மதுரை:கோவில் திருவிழா நடத்துவது தொடர்பான பிரச்னையில், போலீஸ் பாதுகாப்பு கேட்டு தொடுத்த வழக்கில், எதிர் மனுதாரரிடம் தொலைபேசியில் பேசிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, பிரச்னைக்கு தீர்வு கண்டார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ளது தஞ்சாக்கூர். இங்கு கோவில் திருவிழா கொண்டாட சமாதானக் கூட்டம் நடத்த வேண்டும்; விழாவிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி, பாலசுப்பிரமணியன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்ட ஒருவரிடம், நீதிபதி தொலைபேசியில் விசாரித்தார். அவர், 'தஞ்சாக்கூரில் திருவிழா நடைபெறுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' என தெரிவித்ததை, நீதிபதி உறுதிப்படுத்தினார்.
நீதிபதி, 'எதிர்மனுதாரர் தரப்பில் எந்த ஆட்சேபனையும் எழுப்பாததால், சமாதானக் கூட்டம் நடத்துவது பற்றிய கேள்வி எழவே இல்லை. ஜூலை 5 முதல் 13 வரை திருவிழாவை சுமுகமாக நடத்த உரிய பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement