dinamalar telegram
Advertisement

மனைவியின் நகைகளை திருடிபுல்லட் வாங்கிய கணவன்

எழும்பூர்:சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர், அப்துல் ரஷித், 27; 'ஏசி' மெக்கானிக். இவருக்கு திருமணமாகி, நான்கு மாதங்கள் ஆகிறது.இவரது மனைவி, கிண்டியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

கடந்த 25ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்போது, தன் படுக்கையறை கதவை பூட்டி விட்டு சென்றார். அந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, 17 சவரன் நகை திருடப்பட்டது. அப்துல் ரஷித் மனைவி, தன் கணவருடன், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொள்ளைப்போனதாக கூறப்படும் நாட்களில், அந்த பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் இல்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். மேலும், அப்துல் ரஷித், புதிதாக புல்லட் இரு சக்கரம் ஒன்றை வாங்கிஇருந்தார். இது, போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரை தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தனர்.இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில், அப்துல் ரஷித்தை, போலீசார் விசாரித்தனர்.மனைவியின் நகைகளை திருடி, புல்லட் வாங்கியதை ஒப்புக்கொண்டார். அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த உறவினரையும் போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement