3வது முறை பிரதமரை வரவேற்பதை தவிர்க்கும் சந்திரசேகர ராவ்
இந்த செய்தியை கேட்க
பா.ஜ.,வை கடுமையாக எதிர்த்து வரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அக்கட்சிக்கு எதிராக மாநில கட்சிகளை அணி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால், பிரதமர் மோடி, ஐதராபாத் வரும் போது அவரை நேரில் வரவேற்பதை சந்திர சேகர ராவ் தவிர்த்து விடுகிறார். கடந்த மே மாதம், இந்திய வணிக மேலாண்மை நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மோடி வந்த போது, வரறே்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சந்திரசேகர ராவ் பெங்களூரு சென்று விட்டார். முன்னர், பிப் மாதம் மோடி வந்த போதும், சந்திரசேகர ராவ் நேரில் வரவேற்கவில்லை. மாறாக அமைச்சர்கள் மட்டுமே வரவேற்றனர்.
இந்நிலையில், ஐதராபாத்தில் இரண்டு நாள் பா.ஜ., செயற்குழு கூட்டம் இன்று துவங்குகிறது. இதில், பங்கேற்கும் மோடி, நாளை நிர்வாகிகள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இதற்காக ஐதராபாத் வரும் மோடியை சந்திரசேகர ராவ் நேரில் வரவேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்கள் மட்டும் மோடியை வரவேற்பார்கள் என தெரிகிறது. மாறாக, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கேட்டு வருகை தரும் யஷ்வந்த் சின்ஹாவை அவர் நேரில் சென்று வரவேற்க உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாசகர் கருத்து (47)
மோடி பிரதமராக வரவில்லை. கட்சியை வளர்க்க வரும் அரசியல்வாதியா வந்துருக்காரு.
கோமாளித்தனத்தில் இவர் ஸ்டாலினுக்கே டஃபு கொடுப்பாரு போயிருக்கீ.... ஹிஹி...
முதல்வர் பதவிக்கு சற்றும் தகுதி இல்லாத அரசியல் வியாதி . இந்த அளவுக்கு ஆணவம் தேவையில்லை . நிச்சயம் சந்திர பாபு நாயுடுவுக்கு ஏற்பட்ட கதி தான் இவருக்கும் . டெலிங்கனா இவர்களின் அப்பன் வீடு சொத்தா ?. இவருக்கு உடனடியாக மனா னால சிகிச்சை தேவை .
இந்த கருத்த கொடமிளகாய் மூக்கை பார்த்தால் சந்திக்க தோன்றுமா ஹாஹாஹா
ஆட்சியைக் கலைக்கிறேன் பார் எங்கிறாரா?