வீண் விமர்சனம் செய்வோரை நினைத்தால் பரிதாபம்: முதல்வர் பேச்சு
இந்த செய்தியை கேட்க
கரூரில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கரூரில் அடிக்கல் நாட்டப்படும் புதிய திட்டப்பணிகள் விரைவில் நிறைவுபெறும். அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்துவோம். ஆட்சிக்கு வந்தால் துறைகளை பற்றி தெரிந்து கொள்ள 6 மாதங்கள் ஆகும். ஆனால், ஆட்சிக்கு வந்த நாள் முதலே, நொடி முதல் கால அவகாசம் எடுத்து கொள்ளாமல் செயல்படுகிறோம்.ஓராண்டு கால ஆட்சி மன நிறைவை தருகிறது.
வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் போதவில்லை. எனவே அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு பதில் சொல்லவிரும்பவில்லை. மானத்தை பற்றி கவலைப்படாதவர்களுடன் போராட முடியாது. மானத்தை பற்றி கவலைப்படாதவர்கள் வைக்கும் விமர்சனங்களை மதிக்க விரும்பவில்லை.
வீண் விமர்சனம் செய்வோர் குறித்து பரிதாபப்படுகிறேன். பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், கீழ்நிலை தட்டு மக்கள், விவசாயிகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் ஆட்சி பற்றி கேளுங்கள். நான், அனைவரின் கருத்துகளை கேட்டு செயல்படுபவன் . நான் நினைத்தது மட்டும் நடக்க வேண்டும் என நினைப்பவன் அல்ல. நாங்கள் இருக்கிறோம் என காட்டி கொள்ளும் மைக் முன் வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. வீண் விமர்சனங்கள் முன்வைத்து என்னை விமர்சித்து வளர நினைப்பவர்கள் குறித்து பரிதாபப்படுகிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
வாசகர் கருத்து (86)
வச்சுக்கிட்டா வஞ்சனை பண்ணுறாரு .
ம் ம் எப்படியெல்லாம் பேசி பூசி மொழுக வேண்டியிருக்கிறது
Those people with a trace of self respect or an iota of dignity will not be impressed.
எவ்வளவு கொள்ளை
முதல்வர் என்றைக்காவது உண்மையான உள்ளத்துடன் விமர்சனம் செய்கிறாரா சாதாரண கக்கூசு திறப்பு நிகழ்ச்சி மாற்று மதத்தினரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொழுது தவறாமல் ஹிந்து மதத்தினரை விமர்சித்து நேரத்தை வீணடிப்பவர் மற்றவர்களை குறை சொல்லலாமா ?
படிப்பு அறிவு வேண்டும் தலைக்கு உள்ளேயாவது கிரே மேட்டர் இருக்கனும் . இஸ்ரோவை இஸ்ரேல் என்று உளறுவது...