நான்கு இளம் பெண்கள் ஒரே நாளில் காணோம்
கோவை:ஒரே நாளில் கல்லுாரி மாணவியர் உட்பட நால்வர், வீட்டில் இருந்து மாயமானது பற்றி மாநகர போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை பார்மசி கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்த, ஈரோட்டை சேர்ந்த 20 வயது மாணவி, பீளமேடு தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., கணிதம் முதலாம் ஆண்டு படித்த 19 வயது மாணவி, டிப்ளமோ பெற்ற குனியமுத்துாரை சேர்ந்த 23 வயது மாணவி ஆகியோர், வீட்டில் இருந்து காணாமல் போய் விட்டனர்.உக்கடத்தை சேர்ந்த 19 வயது பெண் ஒருவரும், வீட்டில் இருந்து காணாமல் போய் விட்டதாக, அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். காதல், வீட்டில் தகராறு ஆகிய காரணங்களால், இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக, பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.குனியமுத்துார், காட்டூர், ராமநாதபுரம், பெரிய கடைவீதி போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!