வன பணியாளர் தேர்வு; கே.பி.ஆர். மாணவர் முதலிடம்
கோவை:ஐ.எப்.எஸ்., நேர்முக தேர்வு, ஜூன், 23ம் தேதி நடந்தது. இதற்கான முடிவுகள், ஜூன், 28ம் தேதி வெளியாயின. நாடு முழுவதும், 108 பேர் தேர்ச்சி அடைந்தனர். இத்தேர்வில், கே.பி.ஆர்., ஐ.ஏ.எஸ்., அகாடமியில் பயிற்சி பெற்று, அங்கேயே ஆசிரியராக பணிபுரியும் கிருபானந்தன், இந்திய அளவில், 16வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்தார்.கே.பி.ஆர்., ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், அரசூர் கே.பி.ஆர்., கல்லுாரியில் இவருக்கு பாராட்டு விழா நடந்தது. கல்வி குழும நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, ஐ.ஏ.எஸ்., அகாடமியின் இயக்குனர் சிகாமணி நினைவு பரிசு வழங்கினர். பின், அகாடமியின் பயிற்சி இயக்குனர் பழனி முருகன் கூறுகையில், ''2022-23ம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்பு ஜூலை, 18ம் தேதி துவங்கவுள்ளது. ''வெளியூர் மாணவர்கள் தங்கி பயிற்சி பெறுவதற்கான வசதிகள் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமல்லாமல், கல்லுாரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் சேரலாம்,'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!