ரூ.19 லட்சம் இழந்த பெண் மோசடி செய்த நபருக்கு வலை
கோவை:திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஐ.டி., நிறுவன பெண் ஊழியரிடம், 19 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை, கோவை சைபர் கிரைம் போலீசார் தேடுகின்றனர்.
கோவையைச் சேர்ந்த, 36 வயது பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், மறுமணம் செய்ய விரும்பிய அந்த பெண், இணையதளத்தில் தன் விபரங்களை பதிவு செய்தார். சில நாட்களில், மார்சியஸ் சிங் என கூறியவரிடம் இருந்து அழைப்பு வந்தது.

லண்டனில் வசிப்பதாக கூறிய அந்த நபர், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறி உள்ளார். பின், இருவரும் சில மாதங்கள் போனில் பேசி, உறவை வளர்த்தனர்.இந்நிலையில், 'தன் தாய்க்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு, 10 லட்சம் ரூபாய் வேண்டும்' என, அந்த நபர் கேட்டுள்ளார்.
அதை நம்பிய ஐ.டி., பெண் ஊழியர், வங்கியில் கடன் வாங்கி பணம் கொடுத்தார்.மேலும், 9 லட்சம் ரூபாய் வேண்டும் என, அந்த நபர் கேட்டபோது, நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் கொடுத்துள்ளார்.இப்படி, 19 லட்சம் ரூபாய் பணம் வாங்கிய அந்த நபர், அதன் பின் போனை, 'ஸ்விட்ச் ஆப்' செய்து விட்டார்.ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயதேவி விசாரிக்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!