dinamalar telegram
Advertisement

கலெக்டர் அலுவலகத்தில் வேலை ரூ.1.26 கோடி மோசடி; 2 பேர் கைது

மதுரை:மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கிதருவதாக கூறி, 28 பேருக்கு நேர்காணல் நடத்தி, 1.26 கோடி ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை செக்கானுாரணி அருகே கே.புளியங்குளத்தை சேர்ந்தவர் சேகர்; சமையல் காண்ட்ராக்டர். இவரை, செக்கானூரணி முனீஸ்வரன் சந்தித்து தன் நண்பர் ரஞ்சித்குமாருக்கு, கலெக்டர் உதவியாளர் பாண்டியராஜனுக்கு பழக்கமானவர்.கலெக்டர் அலுவலகத்தில் அதிக அளவில் காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றில் தங்கள் பிள்ளைகளுக்கு வேலை வாங்கலாம் என, ஆசை வார்த்தை கூறினார்.

இதை நம்பிய சேகர் தன் மகன், மகளுக்கு உதவியாளர் வேலைக்காக, 8 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். 2019 நவ.,ல் வருவாய் துணை மற்றும் மாநகராட்சி துணை அலுவலர் பணிக்கு வேலை, பயிற்சிக்கு வருமாறு உத்தரவை முனீஸ்வரன் அனுப்பியுள்ளார்.இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் வேலை கிடைத்ததாக எண்ணி, சேகரின் நண்பர்கள், உறவினர்களுக்காக முனீஸ்வரனிடம் கேட்டபோது, 100க்கும் மேற்பட்ட பணிகள் காலியாக இருப்பதாக சேகரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 28 பேரிடம், மொத்தம், 1 கோடியே 26 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு பணிக்கான போலி உத்தரவுகளை, அவர்களை நேர்காணலுக்கு வருமாறு பதிவுத் தபால் அனுப்பினார்.அவர்களிடம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் கலெக்டர் உதவியாளர் என கூறிய பாண்டியராஜன் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி பெண் ஆகியோர் நேர்காணல் நடத்தி, ஐந்து நாட்களில் ஒதுக்கப்பட்ட இடங்களில் பணியில் சேருங்கள் எனக் கூறியுள்ளனர். முனீஸ்வரன், பாண்டியராஜன், ரஞ்சித்குமார் ஆகிய மூவரும் வேலைக்கு சேர சொன்ன இடத்தில் அவர்கள் சென்று விசாரித்த போது, அப்படி ஒரு பணி இல்லை எனவும், ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து பணத்தை திரும்ப கேட்டபோது, 'பணத்தை தரமுடியாது' என மிரட்டல் விடுத்துள்ளனர்.சேகர் அளித்த புகாரின் பேரில், நகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார், முனீஸ்வரன், பாண்டியராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement