உ.பி., சட்டசபைக்குள் செல்பிக்கு தடை : சபாநாயகர் அதிரடி
இந்த செய்தியை கேட்க
Your browser doesn’t support HTML5 audio
லக்னோ: உ.பி., சட்டசபை வளாகத்திற்குள் எம்.எல்.ஏ.,க்கள் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோரின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்படுமென சபாநாயகர் சதிஷ் மகானா எச்சரித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., அரசு அமைந்துள்ளது. நேற்று உ.பி., சட்டசபையில் மாநில பட்ஜெட் தாக்கலான நிலையில், எம்.எல்.ஏக்கள் பலரும் போட்டி போட்டு கொண்டு புகைப்படம் எடுத்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து சபாநாயகர் சதீஷ் மஹானா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சட்டசபைக்குள் எம்.எல்.ஏக்கள் செல்பி எடுத்தாலோ, புகைப்படம் எடுத்தாலோ மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்படும். சட்டசபை கூட்டத்தொடர் சமயத்தின்போது, சட்டசபை வளாகத்தில் தனிப்பட்ட கேமராவை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது. ஊடகங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்படுகிறது. மீறுவோரின் மொபைல் போனை அவை காவலர்கள் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இத்தனை நாள் இது நடந்து வருகிறது... இனிமேல்தான் தடை... இது என்ன பேருந்து நிலையமா ?