
மீன்கள் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, 61 நாட்கள் விசைப்படகில் சென்று மீன்பிடிக்க ஒவ்வொரு ஆண்டும் தடை விதிக்கப்படும்.அந்த வகையில், இந்தாண்டு கடந்த ஏப்., 15ம் தேதி துவங்கி, ஜூன் 14ம் தேதி வரை தடையில் இருக்கும். இந்த நாட்களில் கடலோரங்களில் பைபர் படகு எனும் சிறிய படகில் சென்று மீன்பிடிக்க அனுமதி உண்டு.
மீன்பிடி தடைக்காலம் என்றாலும், கேரளா, கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து, காசிமேடிற்கு மீன்கள் அதிகம் விற்பனைக்கு வருகின்றன.அதேபோல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்தும் கட்லா, ரோகு, ஜிலேபி, வளர்ப்பு இறால், ஆற்று இறால் உள்ளிட்டவையும் விற்பனைக்கு வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மீன் வாங்க காசிமேடில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சிவப்பு வண்ணத்தில் இருந்த 'ரஸனா' என்ற பெரிய சைஸ் மீன் பல கடைகளில் விற்பனை செய்யப்பட்டது.மீன் பிரியர்களால், நேற்று அதிகாலையில் இருந்து காசிமேடு மீன் சந்தை களைகட்ட துவங்கியது.
மீன்களை கொன்று ஊன் வளர்க்க வேண்டுமா.. கழிசடை