பிளஸ் 2 எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் எதிர்கால நலன் கருதி அனுபவம் வாய்ந்த கல்வி நிபுணர்களால் உயர்கல்வி ஆலோசனை வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனாவால் தடைபட்டிருந்த நிகழ்ச்சி இந்தாண்டு மிக பிரமாண்டமாய், புத்தம் புதிய சிந்தனைகளோடு மாணவர்களுக்கு வழிகாட்ட வருகிறது.மே 28, 29, 30 என மூன்று நாட்கள் மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் கல்வி கண்காட்சியும் கருத்தரங்குகளும் நடக்கின்றன.
கல்வி, வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான இந்நிகழ்ச்சிகள் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடக்கிறது.சிறப்பு கருத்தரங்குகளில் புதிய படிப்புகள், அரசு வேலை வாய்ப்புகள், நீட் தேர்வு விளக்கம், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், கலை, சட்டம், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ், ஆக்மென்டட் ரியாலிட்டி, சோஷியல் மீடியா, டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிக்டேட்டா, ரோபாட்டிக்ஸ் உட்பட ஏராளமான கல்விப்பிரிவுகள் குறித்து துறைசார் நிபுணர்கள் பயனுள்ள ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.வேலைவாய்ப்பை எளிதாக்கும் 'டாப்' துறைகள், படிக்கும் போதே மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் குறித்தும் கல்வியாளர்கள் விளக்கமளிக்கின்றனர். அனுமதி இலவசம்.
விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள் என 90க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகள் அமைக்கவுள்ளன. ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப் பிரிவுகள், அவற்றுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து அங்கேயே கேட்டு தெரிந்து கொள்ளலாம். கல்லுாரிகளின் விண்ணப்பம் முதல் மாணவர் சேர்க்கை வரையிலான நடைமுறைகள், கல்விக்கட்டணம் உள்ளிட்டவை குறித்தும் ஒரே கூரையின் கீழ் அனைத்து ஆலோசனையும் பெறலாம். இதன் மூலம் கல்லுாரிகளைத் தேடி மாணவர்கள், பெற்றோர் அலைவதை தவிர்க்கலாம்.
விடை சொன்னால் பரிசு உண்டு
காலை, மாலையில் உயர்கல்வி நிபுணர்கள் ஆலோசனை வழங்கும் கருத்தரங்க நிகழ்ச்சியின்போது மாணவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்போரில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 'டேப்லெட்', 'வாட்ச்' பரிசாக வழங்கப்படும்.
தினமலர், கோவை ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் 'பவர்டு பை' பங்களிப்பாளராக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ் செயல்படுகிறது.கே.எம்.சி.ஹெச்., அன்ட் டாக்டர் என்.ஜி.பி., நிறுவனங்கள், ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, கோவை எஸ்.என்.எஸ்., இன்ஸ்டிடியூஷன்ஸ் ஆகியன இணைந்து வழங்குகின்றன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!