ADVERTISEMENT
ஸ்ரீபெரும்புதுார் : தமிழக முதல்வரை கண்டித்து ராஜிவ் நினைவகத்தில் காங்., கட்சியினர் சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவகத்தில் நேற்று காங்., தலைவர்கள் பலர் நினைவு அஞ்சலி செலுத்தினர். அப்போது, ராஜிவ் நினைவகத்தின் உள்ளே காங்., சேவா தளம், காங்., பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் எட்டு பேர், முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமியை கண்டித்து, காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!