ADVERTISEMENT
நெட்டப்பாக்கம்:பண்டசோழநல்லுார் - வடுக்குப்பம் சாலையில் கழிவு நீர் ஓடுவதால், தொற்று நோய் ஏற்படும் ஆபத்து நிலவி வருகிறது.
நெட்டப்பாக்கம் தொகுதி, பண்டசோழநல்லுாரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சிவன் கோவில் எதிரில் உள்ள குளத்தில் விடப்பட்டு வந்தது.
தற்போது குளம் துார்ந்து விட்டது. இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி, பண்டசோழநல்லுார்-வடுக்குப்பம் சாலையில் ஓடுகிறது.இதனால், இவ்வழியாக செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.மேலும் இந்த கழிவு நீரால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!