பிளஸ் 2 மாணவர்களுக்கான தினமலர் வழிகாட்டி: கோவையில் வரும் 24 முதல் 26ம் தேதி வரை ஆலோசனை ரெடி
வழிகாட்டும் நிபுணர்கள்
நிகழ்ச்சியில், பல்வேறு தலைப்புகளில், நிபுணர்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றனர். மின்சார வாகனம், தானியங்கி மயம் குறித்து செந்தில் ராஜா, கல்வி கடன்கள் குறித்து விருதாசலம், நுழைவுத்தேர்வு மற்றும் கல்வி உதவித்தொகை குறித்து நெடுஞ்செழியன், அனிமேஷன் மற்றும் மீடியா குறித்து கிஷோர்குமார் ஆகியோர் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.வேலை பெற வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் குறித்து சுஜித்குமார், கோர் இன்ஜினியரிங் குறித்து கருப்புசாமி, குடிமைப்பணிகள் குறித்து ஜாங்கிட், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் குறித்து ஜானட், பாதுகாப்பு களத்தில் உள்ள வாய்ப்புகள் குறித்து விவேக்ராம்குமார், சைபர் செக்யூரிட்டி குறித்து சையது முகமது, சிகரம் தொடு என்ற தலைப்பில் வேலுமணி, மரைன் கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேலாண்மை குறித்து சுரேஷ்குமார் ஆகிய நிபுணர்கள் விவரிக்கின்றனர்.மருத்துவ அறிவியல் குறித்து சுகுமாறன், பட்டயக் கணக்காளர், வணிகவியலின் எதிர்காலம் குறித்து சேகர், கலை பாடப்பிரிவு குறித்து மரியாஜோசபீன், தொழில்சார் கவுன்சிலிங் குறித்து காந்தி, அரசு வேலைவாய்ப்புகள் குறித்து நித்யா, அறிவியல் குறித்து சித்ரா, முன்னணி படிப்புகள் குறித்து ரமேஷ் பிரபா, நீட், ஜே.இ.இ., தேர்வுகளில் வெற்றி பெற தேவையான ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
அரங்குகளில் அனைத்தும் 'ரெடி'
பல்வேறு முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் கல்வி ஆலோசனை நிறுவனங்கள் என, 80க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இந்த அரங்குகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆர்ட்டிபீசியல் இன்டெலிஜென்ஸ், சைபர் செக்யூரிட்டி, ரோபோட்டிக்ஸ், வேலைவாய்ப்பு பெற தேவையான திறன்கள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் வாய்ப்புகள் மற்றும் அவை குறித்த தகவல்களை ஒரே இடத்தில் அறியலாம். கல்வி நிறுவனங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் மாணவர்கள், பெற்றோருக்கு, கல்வி நிறுவன பிரதிநிதிகள் விளக்கம் அளிப்பர்.
கரம் கோர்க்கும் நிறுவனங்கள்
'தினமலர்' நாளிதழுடன், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து நிகழ்ச்சியை நடத்துகிறது. முக்கிய பங்களிப்பாளராக ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், 'ஸ்பான்சர்'களாக, கே.எம்.சி.எச்., அண்டு டாக்டர் என்.ஜி.பி., கல்வி நிறுவனங்கள், ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி., கல்லுாரி, கற்பகம் கல்வி நிறுவனங்கள், குமரகுரு லிபரல் கலை, அறிவியல் கல்லுாரி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி, எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள், கே.ஜி.ஐ.எஸ்.எல்., கல்வி நிறுவனங்கள் ஆகியவை நிகழ்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.
பதில் சொல்லுங்க; பரிசு வெல்லுங்க!
காலை, 10:00 முதல், மாலை, 6:30 மணி வரை கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடக்கும். மூன்று நாட்களும் இரு வேளைகளில் கருத்தரங்கம் நடத்தப்படும்; அனுமதி இலவசம். மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கருத்தரங்கில் கேள்விகள் கேட்கப்படும். சரியாக பதில் சொல்பவர்களுக்கு, 'டேப் லெட்' மற்றும் வாட்ச் பரிசாக வழங்கப்படும். கோவை அவிநாசி ரோடு, கொடிசியா நுழைவு வாயிலில் இருந்து கொடிசியா அரங்கம் வரை மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் www.kalvimalar.com என்ற இணையதளம், 91505 74441 என்ற 'வாட்ஸ் ஆப்' எண் வழியாகவும் பெயர் மற்றும் விபரங்களுடன் பதிவு செய்யலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!