ADVERTISEMENT
ஆலந்துார்-பொதுமக்கள் குறைகள், தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில், சென்னை நகரில் முதல் முறையாக ஆலந்துார் தொகுதியில், 'வளமான ஆலந்துார்' எனும் செயலி, இணையதள சேவை துவக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய, சம்பந்தப்பட்ட அலுவலகமாக சென்று புகார் அளித்து தீர்வு காண்பதற்கு தவிக்கின்றனர்.இதற்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், முதன்முறையாக ஆலந்துார் தொகுதி எம்.எல்.ஏ.,வும், தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான அன்பரசன் சார்பில், 'வளமான ஆலந்துார்' எனும் பெயரில் செயலியும், இணையதள சேவை ஒன்றும் உருவாக்கப்பட்டது.இதன் துவக்க விழா, ஆலந்துாரில் நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி.,- டி.ஆர்.பாலு, செயலியை துவக்கி வைத்தார். ராஜ்யசபா எம்.பி., - ஆர்.எஸ்.பாரதி, இணையதள சேவையை துவக்கினார்.

இந்த செயலியை மொபைல் போன், கணினியில் பதிவிறக்கம் செய்து, தங்கள் பகுதியில் உள்ள புகார்களை தெரிவித்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய தீர்வு காணப்படும்.இந்த செயலி வாயிலாக, ஆலந்துார் தொகுதியில் உள்ள குடிநீர், கழிவு நீர், குப்பை, சுகாதாரம், சாலை, மின்சாரம் உள்ளிட்ட, 16 வகையான பிரச்னைகளுக்கு புகார் அனுப்பும் வசதி உள்ளது.இந்நிகழ்ச்சியில், ஆலந்துார் மண்டல குழு தலைவர்சந்திரன், பல்வேறு நலச்சங்கத்தினர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!