சாலைகளின் தரம்: அதிகாரிகள் ஆய்வு
சென்னை,-சென்னையின் முக்கிய சாலைகளில், நெடுஞ்சாலையின் சென்னை பெருநகர பிரிவு கண்காணிப்பு பொறியாளர் செல்லதுறை தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.சென்னை ஜவஹர்லால் நேரு சாலை மற்றும் பெரிய தெற்கத்திய சாலை, பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலைகளில் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை, நெடுஞ்சாலையின் சென்னை பெருநகர பிரிவு கண்காணிப்பு பொறியாளர் செல்லதுறை தலைமையில், சென்னை சாலை, வடிகால் மற்றும் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வு பணி தொடர்பான அறிக்கையை, தணிக்கை குழு தலைமை அதிகாரி வாயிலாக அரசிற்கு அனுப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!