இரண்டு நாட்கள் குடிநீர் நிறுத்தம்
சென்னை,--பிரதான குழாயை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் மாதவரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க., நகர் ஆகிய மண்டலங்களில், குறிப்பிட்ட பகுதிகளில் இரண்டு நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.இது குறித்து, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பு:மாதவரம் மெட்ரோ ரயில் பணிக்காக, புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செல்லும் பிரதான குழாயை, மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. இந்த பணி, 23 முதல் 24ம் தேதி காலை வரை நடைபெற உள்ளது. இதனால், மாதவரம் மண்டலத்தில் விநாயகபுரம், பொன்னியம்மன்மேடு மற்றும் திரு.வி.க., நகர் மண்டலத்தில் பெரம்பூர், புளியந்தோப்பு ஆகிய இடங்களில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.அதேபோல், தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, வியாசர்பாடி, படேல் நகர், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய இடங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். இப்பகுதி மக்கள், முன்னெச்சரிக்கையாக குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளவும்.குடிநீர் அவசர தேவைக்கு, மாதவரம் மண்டலம்- 81449 30903; தண்டையார்பேட்டை மண்டலம்- 81449 30904; திரு.வி.க., நகர் மண்டலம்- 8144930906 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!