dinamalar telegram
Advertisement

டெலிவரி ஊழியரிடம்கூரியர் பை திருட்டு

மாங்காடு,--மாங்காடு அருகே 'கூரியர்' டெலிவரி செய்யும் ஊழியரின் பையை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். மாங்காடை அடுத்த முகலிவாக்கம், பட்டம்மாள் நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு, கூரியரை டெலிவரி செய்ய நேற்று முன்தினம் ஊழியர் சென்றார். வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தின் மீது, கூரியர் பையை வைத்துவிட்டு, பொருளை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றார்.சிறிது நேரம் கழித்து வெளியே வந்தபோது, பை மாயமாகியிருந்து. திருடப்பட்ட பையில், கிரெடிட், டெபிட் கார்டுகள், பாஸ்போர்ட், மொபைல் போன் என, விலையுயர்ந்த பொருட்கள் இருந்தன. இது குறித்து மாங்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கூரியர் பையை திருடி சென்றது பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement