கிண்டி சிறுவர் பூங்காவில் மீண்டும் யானை வருமா?
அப்போது, குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர், பள்ளி மாணவ - மாணவியர் வருகை அதிகரித்தது.இந்நிலையில், கிண்டி சிறுவர் பூங்காவை, சிறிய ரக பூங்கா என தேசிய வன உயிரின ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, 1997ல், யானை, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள், வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டன.அதன்பின், கிண்டி சிறுவர் பூங்கா செல்வோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. அதேவேளையில், இங்கு யானைக்கு மட்டுமாவது, தேசிய வன உயிரின ஆணையம் விதி விலக்கு அளிக்க வேண்டும் என, அப்போதிருந்தே கோரிக்கை எழுந்தது.இதை நிரூபிக்கும் விதமாக, பூங்காவில் உள்ள பார்வையாளர்கள் ஆலோசனை புத்தகத்தில், 'குழந்தைகள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஒரு யானை வளர்க்க வேண்டும்' என்ற கோரிக்கை அதிகமாக பதிவாகி உள்ளது.
வன உயிரினங்களில், குழந்தைகளுக்கு யானை, குரங்கு, மான் போன்றவை எப்போதுமே அதிசயம் தான். கிண்டி சிறுவர் பூங்காவில் ஒரு யானை இருந்தால், குழந்தைகள் வரத்து அதிகரிப்பதுடன், சிறுவர் பூங்காவின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இதற்கு, தேசிய வன உயிரின ஆணையத்திடம் முறையிட்டு, கிண்டி சிறுவர் பூங்காவில் ஒரு யானை வளர்க்க அனுமதி வாங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.சென்னையில் பணம் கொடுத்து பொழுதை கழிக்க பல இடங்கள் உள்ளன. இயற்கையை நேசிக்கும் விதமாக கிண்டி சிறுவர் பூங்கா உள்ளது. பயண துாரம், நேர விரயம் என வண்டலுார் செல்வது எல்லாராலும் முடியாது. கிண்டியில் உள்ள விலங்கினங்களுடன், ஒரு யானை இருந்தால், குறைந்த கட்டணத்தில் எல்லாரும் செல்ல முடியும். இதற்கு, தேசிய வன உயிரின ஆணையம் மனது வைக்க வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள்பார்வையாளர் கட்டணத்தில் தான், இங்குள்ள உயிரினங்களை பராமரிக்கிறோம். ஒரு யானை வளர்க்க போதுமான இட வசதி உள்ளது. யானை இருந்தால், தற்போதைய கூட்டத்தை விட பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. யானை வளர்க்க வேண்டி பலர் முறையிட்டு வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், ஒரு யானை வளர்க்க அனுமதி கேட்டு, தேசிய வன உயிரின ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளோம். அவர்கள் தான் அனுமதி வழங்க வேண்டும்.
- வனத்துறை அதிகாரிகள்
- -நமது நிருபர்- -
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!