ADVERTISEMENT
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அடை மிதிப்பான் குளம் கல்குவாரியில் பாறையில் சிக்கிய ஆறு பேரில் இதுவரை இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று 5வது நாளாக குவாரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து ஆறாவது நபரான ராஜேந்திரன் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கலெக்டர் விஷ்ணு கூறுகையில், பத்து நாளாக இன்றும ராஜேந்திரன் தேடும் பணி நடக்கிறது. அடுக்கு பாறைகள் எழுந்துள்ளதால் உடலை மீட்பதில் சிக்கல் இருக்கிறது. வெடிமருந்து வைத்து தகர்த்து பாறைகளை தகர்த்து மீட்கும் பணி நடக்கும். குவாரி உரிமையாளர் செல்வராஜ் அவர் மகன் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஆவணங்களை தேடி வருகிறோம். அவரது சொத்துக்கள் முடக்கப்படும். கைது செய்ய நாங்குநேரி உதவி கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடான குவாரி மீது நடவடிக்கை எடுக்காத கனிமவளத்துறை உதவி இயக்குனர் வினோத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வளவு வியாக்யானம் பேசுபவர், குவாரிக்கு அனுமதி உள்ளதா என்றுகூட முன்னால் பார்க்க முடியவில்லையா ? காசு கொழுத்தவன் அதைக் காட்டி. வெளியே வந்து விடுவான். உழைக்க வந்த குடும்பத்தலைவர்களை பலி கொடுத்த குடும்பங்களுக்கு என்ன பதில் சொல்லும் அரசு ?ஒரு அதிகாரியை சஸ்பெண்ட் செய்துவிட்டோம், உங்கள் துயரம், கவலைகள், கணவர்களை, பெற்றவரை, பெற்ற பிள்ளைகளை இழந்தவர்கள் எல்லாரும் சந்தோஷப்படுங்கள் என்கிறாரா ?