பாலியல் தொல்லை : தலைமையாசிரியர் ஜாமின் மனு தள்ளுபடி
மதுரை : மதுரையில் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தலைமையாசிரியர் ஜோசப் ஜெயசீலன் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மதுரையில் ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் ஜோசப் ஜெயசீலன். இப்பள்ளிக்கு வேறு பள்ளியிலிருந்து இரு ஆசிரியைகள் மாற்றுப் பணி அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இதை அரசு ரத்து செய்தது. இதற்கு எதிராக ஜோசப் ஜெயசீலன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்: இரு ஆசிரியைகள் மனுதாரருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் புகார்களை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர். இதனால் மாற்றுப்பணியில் நியமித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மனுதாரருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிய வேண்டும் என்றார்.

பணியிடத்தில் பாலியல் தொல்லை அளித்ததாக மதுரை நகர் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்தனர். அவரது முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கைதான ஜோசப் ஜெயசீலன் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி டீ.வி.தமிழ்ச்செல்வி: மனுதாரர் மீதான குற்றச்சாட்டின் தன்மை தீவிரமானது. அலைபேசியில் பேசிய பதிவுகள் குரல் பரிசோதனைக்காக தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை வர வேண்டியுள்ளது. இந்நிலையில் ஜாமின் அனுமதிக்க விரும்பவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!