குரங்கணி -- டாப் ஸ்டேஷனுக்கு ரோப்கார் : நெடுஞ்சாலை துறை அமைச்சர் தகவல்
போடி : தேனி மாவட்டம், குரங்கணி -- டாப் ஸ்டேஷனுக்கு 'ரோப்கார்' வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.
போடி அருகே குரங்கணி -டாப் ஸ்டேஷன் மலைப்பகுதியாகும். போடியில் இருந்து 18 கி.மீ., தொலைவிற்கு குரங்கணி வரை ரோடு உள்ளது. அங்கிருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள டாப்ஸ்டேஷனுக்கு ரோடு வசதி இல்லை. இதனால் முட்டம், முதுவங்குடி, டாப் ஸ்டேஷனுக்கு சென்று வர சிரமம் அடைகின்றனர். இந்நிலையில் குரங்கணி - டாப் ஸ்டேஷனுக்கு ரோடு அல்லது ரோப்கார் அமைப்பது குறித்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு, அமைச்சர் ஐ.பெரியசாமி, கலெக்டர் முரளீதரன் ஆகியோருடன் ஆய்வு செய்தார்.
அமைச்சர் எ.வ.வேலு கூறியது:
குரங்கணி -- டாப் ஸ்டேஷனுக்கு 25 கி.மீ., தூரம் ரோடு போடுவதன் மூலம் வனம் அழிந்து விடும் என வனத்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்ததில் ரோப்கார் அமைக்கலாம் என்றார். ரோப்கார் அமைக்க ஆய்வு செய்ய வந்துள்ளோம். வனத்துறை அனுமதி கிடைத்தால் ரோடு அமைக்கப்படும். அல்லது முட்டம், முதுவாக்குடி, டாப் ஸ்டேசன், மூணாறு பகுதியில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை கொண்டுவர ரோப்கார் வசதி செய்யப்படும் என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!