சிலவரி அரசியல்...
தமிழகத்தில் தற்போது அனைத்து பொருட்களின் விலையும் விஷம் போல் ஏறியிருக்கின்ற சூழ்நிலையில் நுால் விலை உச்சத்தை எட்டியுள்ளது. நுால் விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்திடுக. - பன்னீர்செல்வம், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்
தமிழக தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள "ஸ" எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். "தமிழ் தமிழ்" என முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு தி.மு.க., வினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது. "ஸ"வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும்.- அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள கல்குவாரியில் ராட்சத பாறை உருண்டு விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி, வேதனையை ஏற்படுத்தியுள்ளது.- விஜயகாந்த், தே.மு.தி.க., தலைவர்
நாட்டிற்கு பெரிய அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பின்னலாடை உற்பத்தியை முடக்கும் அளவுக்கு தொடர்ந்து நுால் விலையை உயர்த்தி வருவது கண்டனத்திற்குரியது.- தினகரன், அ.ம.மு.க,. பொதுச்செயலர்
கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்து செல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.- சீமான், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்
இங்கிலாந்தின் ஏம்ஸ்பரி மாநகரக் கவுன்சிலில் துணை மேயராக பொறுப்பேற்றுள்ள சென்னை மருத்துவர் மோனிகா தேவேந்திரனுக்கு வாழ்த்துகள்.- திருமாவளவன், வி.சி., தலைவர்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!