உழைத்து ஊதியம் பெறுவோரை இழிவுபடுத்துவதா? : பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
இதுகுறித்த, அவரது அறிக்கை:
கடந்த வாரம், 'துக்ளக்' இதழ் ஆண்டு விழா நடந்தது. அதில், இதழின் ஆசிரியர் குருமூர்த்தி பேசுகையில், 'முதல்வரின் ஓசி பஸ் பயணம் தான் திராவிட மாடலா?' என, கேள்வி எழுப்பினார்.
இதற்கு, இம்மாதம் 17ம் தேதி முரசொலி நாளிதழில், 'தட்சணையில் வாழக்கூடிய கூட்டத்தின் பிரதிநிதியான குருமூர்த்தி, ஓசியை பற்றி பேசலாமா?' என்று, அவர் சார்ந்துள்ள பிராமண சமுதாயத்தை இழிவாக பேசியுள்ளது மிகவும் கண்டிக்கத் தக்கது.பிராமணர்கள் உழைப்பால், நேர்மையால், கடவுள் பக்தியால், தேச பக்தியால் உயர்ந்தவர்கள்.தி.மு.க., தலைவர்கள், கடவுள் மறுப்பை பற்றி பேசுவர். அவர்களது குடும்பத்தினர் பரிகார பூஜை, அபிஷேகம் என்று கோவில் கோவிலாக செல்வர்.எதற்கெடுத்தாலும் பிராமண சமூகத்தை இழிவு செய்வது இவர்களது வாடிக்கை. இவர்கள் நடத்தும் கம்பெனிகளுக்கு பிராமணர் ஆடிட்டர்; குடும்ப வைத்தியராக பிராமண டாக்டர்கள்; கோர்ட்டில் வாதாட பிராமண வக்கீல் அமர்த்திக் கொள்வது இவர்கள் வழக்கம்.
சபை நாகரிகம் கருதி, பல கசப்பான உண்மைகளை நாங்கள் கூற விரும்பவில்லை.முரசொலி பத்திரிக்கை தன் இழிவான விமரிசனத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்; வருத்தம் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, பம்மல் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (179)
உழைத்து தட்சணை வாங்குவதில் தவறில்லை. உழைக்காமலே அடுத்தவன் சொத்தை மூட்டை போடுவது, அரசின் பொது சொத்தை ஆக்ரமிமப்பது,பொது பணத்தில் ஊழல் செய்வது, எதிலும் கமிஷன், லஞ்சம், அராஜகம் செய்வது மற்றும் தனிமனித ஒழுக்கம் இல்லாதது இவை தான் கேவலமானது. இவற்றை தங்கள் செய்யவில்லை என்று ஒலிமுரசு சொல்ல முடியுமா . ஆதாயம் இல்லாமல் ஏதாவது ஒரு திட்டம் ஆரம்பித்ததாக சரித்திரம் உண்டா ?.
அன்று ஒரு அந்தணர் செய்த பாவம், திமுகவை ஆட்சியில் அமரவைத்து காமராஜரை தோற்கடித்த பாவம் இன்று பிராமணர்களை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்து சமுதாயத்திற்கும் இழிவுபடுத்தும் ஒரு அராஜக ஆட்சி நடைபெறுகிறது. இனியாகிலும் இந்துக்கள் ஒன்றாக இணைந்து இந்த அராஜக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்
இதற்க்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக திராவிட தலைவர்களின் நிறுவனங்களில் உயர் பதவி வகிக்கும் பிராமிணர்கள் பதவி விலகலாமே .அதை செய்தாலே திராவிட கூட்டங்கள் கலங்கும் என்பதே உண்மை
பிராமணர்கள் ஆள்வதில்லை ..ஆள்பவர்கள் இவர்களை கன்சல்ட் பண்ணாமல் ஆள்வதில்லை ..
இதில் வியப்பெதும் இல்லை
அந்த பத்திரிக்கைக்கு வேற பெயர் அண்ணாமலை அவர்கள் வைத்துள்ளார் ..ஆகயால் அந்த பத்திரிகைக்கு விளமபரம் வேண்டாம் ..