கிராம மக்கள் எதிர்ப்பு
மேலூர் :கட்டக்காளைபட்டியில் அரசு இடத்தில் சிட்கோ நிறுவன மேலாளர் கண்ணன், செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் மண் அள்ளும் இயந்திரத்தை கொண்டு சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மண்டல துணை தாசில்தார் பூமாயி, ஆர்.ஐ., முனியசாமி, வி.ஏ.ஓ., முகமது ரியாஸ், எஸ்.ஐ., தர்மலிங்கம் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். தாலுகா அலுவலகத்தில் சமாதானக்கூட்டம் நடத்துவது என முடிவெடுத்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!