dinamalar telegram
Advertisement

பருத்தி இலை சிவப்பாதலைகட்டுப்படுத்துவது எப்படி

மதுரை :பருத்தி பயிர்களில் நுண்ணுாட்ட கலவை பயன்படுத்துவதன் மூலம் மெக்னீசிய குறைபாட்டால் இலைகள் சிவப்பாவதை தடுக்கலாம் என மதுரை வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன், விஞ்ஞானி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது: பருத்தி நட்ட 30 வது நாளில் மெக்னீசியம் குறைபாட்டால் இலைகள் சிவப்பாக மாறும். 100 கிலோ தொழுஉரத்துடன் வேளாண்மை பல்கலையின் 10 கிலோ நுண்ணுாட்ட உரக்கலவையை கலந்து 10 நாட்கள் வைத்திருந்து தொழுஉரமாக அளிக்கவேண்டும்.ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2.5 கிலோ காட்டன் பிளஸ் கலந்து பூக்கும் பருவத்தில் செடி நனையும்படி தெளிக்க வேண்டும். இதன் மூலம் பூ உதிர்வது தடுக்கப்பட்டு காய் வெடித்து விதை பருத்தி மகசூல் அதிகரிக்கும் என்றனர்.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement