பல்கலையில் ஆர்ப்பாட்டம்
மதுரை, :மதுரை காமராஜ் பல்கலையில் 136 தற்காலிக, தொகுப்பூதிய பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், மீண்டும் பணி வழங்க கோரியும் பல்கலை முன் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில பொதுச்செயலாளர் செல்வம் பேசுகையில், "10 ஆண்டுகள் வரை பணியாற்றிய பலர் முன்னறிவிப்பின்றி நீக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அரசு இதுகுறித்து விசாரிக்க வேண்டும்" என்றார்.மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் நீதிராஜன், ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசகன், சத்துணவு சங்க ஊழியர் சங்கத் தலைவர் அய்யங்காளை, செவிலியர் மேம்பாட்டு சங்கத் தலைவர் ராஜி, பல்கலை தற்காலிக ஊழியர் சங்கத்தலைவர் சுந்தரபாண்டியன், ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், துணை செயலாளர் சின்னகாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!