குரூப் 2 தேர்வுக்கு224 மையங்கள்
மதுரை :மதுரை மாவட்டத்தில் 224 மையங்களில் நடக்க உள்ள டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில் 64 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.அரசு துறைகளில் 5529 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான இத்தேர்வு மே 21 காலை 10:00 மணிக்கு நடக்கிறது. மதுரை மாவட்டத்திற்கான வினாத்தாள்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் நேற்று வந்திறங்கின. இத்தேர்வுக்காக பஸ் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!