சாக்கடைகள் துார்வாரும் பணி
திருமங்கலம் :திருமங்கலம் பகுதியில் 2 நாட்களாக பெய்த மழையால் மதுரை மெயின் ரோட்டில் மழைநீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.சில ஆண்டுகளாக இந்தப் பகுதியில் உள்ள சாக்கடைகள் துார்வாரப்படாததால் சாக்கடை நீர் மற்றும் மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நகராட்சி ஊழியர்கள் மதுரை ரோட்டில் ஸ்டேட் பாங்க் முதல் மின்வாரிய பஸ் ஸ்டாப் வரை ஒரு பகுதியில் மூடிகளை முற்றிலுமாக அகற்றி சாக்கடைகளை துார்வாரினர்.இதனால் ரோட்டில் தேங்கியிருந்த மழை நீர் வழிந்தது. இப்பணிகளை நகராட்சி தலைவர் ரம்யா, துணைத்தலைவர் ஆதவன், கமிஷனர் டெரன்ஸ் லியோன் பார்வையிட்டனர். இதேபோல் திருமங்கலத்தின் அனைத்து பகுதிகளிலும் மண் மேவி உள்ள சாக்கடைகள் அனைத்தையும் துார்வார வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!