நலத்திட்டங்களை நிறுத்தி விட்டுஓராண்டில் நூறாண்டு சாதனையா உதயகுமார் விளாசல்
திருமங்கலம் :'தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் அனைத்து நலத்திட்டங்களையும் நிறுத்திவிட்டு நூறாண்டு சாதனை படைத்ததாக பெருமை பேசுவதாக' முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டினார்.திருமங்கலம் கீழ உரப்பனூர் இந்திரா காலனி, பொன்னமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாடக மேடை, மேல்நிலை குடிநீர் தொட்டி, ரேஷன் கடை, அங்கன்வாடி மையத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை தருவதற்கு முதல் கையெழுத்து போடுவதாக கூறினர். ஆனால் அதை செயல்படுத்தவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக தங்கம் மற்றும் பண உதவி வழங்கப்பட்டது. அவற்றையும், மாணவர்களுக்கான லேப்டாப், சைக்கிள் போன்றவற்றையும் நிறுத்திவிட்டனர். அனைத்து நலத்திட்டங்களையும் நிறுத்திவிட்டு, ஓராண்டில் நுாறாண்டு சாதனை செய்ததாக பொய் பிரசாரம் செய்கின்றனர்.ராஜிவ் கொலை வழக்கில் சிக்கிய 7 பேரின் விடுதலைக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் முதலில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அளித்துள்ளது, என்றார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!