dinamalar telegram
Advertisement

விடியல் இல்லா வெறும் விளம்பர அரசு : தி.மு.க., மீது செல்லூர் ராஜூ காட்டம்

சோழவந்தான்'தி.மு.க., ஆட்சி விடியல் தரும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வெறும் விளம்பரம்தான் உள்ளது' என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.மதுரை மேற்கு தொகுதியில் ரூ.37 லட்சம் மதிப்பில் தாரப்பட்டி பிரிவில் பஸ் ஸ்டாப் பூமி பூஜை, மேலமாத்துாரில் ரேஷன் கடை, துவரிமான் சக்தி மாரியம்மன் கோயிலை சுற்றி அமைக்கப்பட்ட மேற்கூரையை திறந்து வைத்து கூறியதாவது :திருநெல்வேலியில் விபத்து நடந்த கல்குவாரிக்கு அ.தி.மு.க., ஆட்சியில் அனுமதி தரவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அனுமதி வழங்கியது கேள்விக்குறியாக உள்ளது. இந்த ஆட்சி விடியல் தரும் என மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். ஆனால் விடியல் இல்லாமல் ஓராண்டில் வெறும் விளம்பரம்தான் உள்ளது.பா.ஜ., ஆட்சி அமைக்கும் என அண்ணாமலை கூறுவது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. கட்சியினரை உற்சாகப்படுத்த சீமான், கமல் உள்ளிட்டோரும் 'அடுத்து நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்' என கூறி வருகின்றனர். மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இருப்பது போல் தோன்றும். ஆனால் திராவிட கட்சியுடன் கூட்டணி வைத்தால்தான் குறைந்த 'சீட்'டாவது கிடைக்கும். இங்கு திராவிட கட்சிகளுக்குத்தான் செல்வாக்கு, என்றார்.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement