dinamalar telegram
Advertisement

!மேடம் உங்களைத்தான் கேட்கிறோம்...பதில் சொல்லுங்க... தி.மு.க., கவுன்சிலர்கள் மேயரிடம் கொதிப்பு

ADVERTISEMENT
மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் பட்ஜெட் விவாதம் துவங்கியது. மண்டல தலைவர்கள் வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் ஷர்மா, சுவிதா, தி.மு.க.,கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், லட்சிகாஸ்ரீ, காங்., கார்த்திகேயன், வி.சி.க., முனியாண்டி, மா.கம்யூ., ஜென்னியம்மாள் வார்டு அடிப்படை பிரச்னைகள் குறித்து பேசினர். கமிஷனர், மேயர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.


@@மாநகராட்சிக்கு ரூ.1000 கோடி கடன்
வார்டு 64 சோலை ராஜா (அ.தி.மு.க.,): அ.தி.மு.க., கொண்டு வந்த முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் தாமதமாகிறது. 2023 மேயில் பணி முடிக்க வேண்டும். வைகை கரையில் பூங்கா, சைக்கிளிங் டிராக் திட்டத்தின் நிலை என்ன. வார்டுக்கு ரூ.5 லட்சம், மண்டலத்திற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும். கமிஷனர்: அம்ரூத் திட்டத்தில் முல்லை பெரியாறு குடிநீர் திட்ட பணி நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பண்ணைபட்டியில் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி 25 சதவீதம் முடிந்தது. வார்டுகளில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்படுகிறது. வைகை கரையில் பூங்கா, சைக்கிளிங் டிராக் குறித்து ஒப்பந்தத்தில் இல்லை. புதிதாக ஒப்பந்தம் கோர திட்டமிடப்படும். மேயர்: மதுரை மாநகராட்சியில் ரூ.1000 கோடி வரை கடன் இருப்பதால் தான் வார்டுகள், மண்டலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

அ.தி.மு.க., வெளிநடப்பு, தி.மு.க., கொதிப்பு
இதனையடுத்து சொத்து வரி உயர்வை கண்டித்த சோலை ராஜா உள்ளிட்ட அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கவுன்சில் செயலாளர் இருக்கை முன் கூடி கோஷமிட்டனர். அவர்களை வெளியேற கோரி தி.மு.க., கவுன்சிலர்களும் கோஷமிட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. வெளிநடப்பு செய்த பின்பும் அ.தி.மு.க.,வினர் கோஷமிட்டனர். அவர்களுக்கு மேயர் கண்டனம் தெரிவித்தார். பின் கூட்டம் நிறைவுபெற்றதாக மேயர் கூறியதும் 'என்ன பேச போகிறீர்கள் என முன்பே எழுதி வாங்கி விட்டு கடைசி வரை பேச வாய்ப்பளிக்காமல் கூட்டத்தை முடித்துவிட்டீர்கள்' என தி.மு.க., கவுன்சிலர்கள் கொதித்தனர். முறையிட மேயர் அறைக்கும் சென்றனர். அடுத்த கூட்டத்தில் வாய்ப்பு அளிப்பதாக மேயர் கூறியதால் கலைந்து சென்றனர்.

நேரத்தை வீணடித்த கவுன்சிலர்கள்
கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் சிலர் மாநாட்டில் பேசுவது போல் நீண்ட நேரம் பேசி நேரத்தை வீணடித்தனர். இதனால் பிற கவுன்சிலர்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்காமல் போனது. 31வது வார்டு காங்., கவுன்சிலர் முருகனின் அலைபேசி அடிக்கடி 'அழகெல்லாம் முருகனே' என பாடியதால் பிற கவுன்சிலர்கள் அவரைப் பார்த்து சிரித்தனர். ஆனாலும் அலைபேசியை 'சைலன்ட் மோடில்' வைக்காமல் கடைசி வரை சாதித்தார்.

மதுரை, மே 19 - -

மக்களுக்காக குரல் கொடுப்போம்

எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா கூறியதாவது: முன்வரிசை இருக்கைகள் வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்காமல் 3 மாதம் அவகாசம் கேட்டு அறிக்கை விட்ட மேயரை கண்டிக்கிறோம். இருக்கை பின்புறம் இருந்தாலும் மக்களுக்காக குரல் கொடுப்போம். சொத்து வரி உயர்வை திரும்ப பெற கேட்டதற்கு மேயர் பதில் கூறவில்லை. மேயருக்கு ஊதியம் இல்லாத ஆலோசகரை நியமித்தது தேவையற்றது. கடந்த ஆட்சி திட்டங்களை முடக்கி வைத்துள்ளனர் என்றார்.மதுரை மாநகராட்சி பட்ஜெட் விவாதத்தில் பேச வாய்ப்பு அளிக்காமலேயே கூட்டத்தை முடித்ததால் தி.மு.க., கவுன்சிலர்கள் பலர் கொதித்தனர். 'மேடம் உங்களை தான் கேட்கிறோம் பதில் கூறுங்கள்' என கவுன்சிலர்கள் கேட்டும் மேயர் இந்திராணி மவுனமாக வெளியேறினார். சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மக்களுக்காக குரல் கொடுப்போம்

எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா கூறியதாவது: முன்வரிசை இருக்கைகள் வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்காமல் 3 மாதம் அவகாசம் கேட்டு அறிக்கை விட்ட மேயரை கண்டிக்கிறோம். இருக்கை பின்புறம் இருந்தாலும் மக்களுக்காக குரல் கொடுப்போம். சொத்து வரி உயர்வை திரும்ப பெற கேட்டதற்கு மேயர் பதில் கூறவில்லை. மேயருக்கு ஊதியம் இல்லாத ஆலோசகரை நியமித்தது தேவையற்றது. கடந்த ஆட்சி திட்டங்களை முடக்கி வைத்துள்ளனர் என்றார்.

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement