இருசக்கர வாகனங்களை ஓட்டும் சிறார்கள் அதிகரிப்பு
கொடைரோடு, :திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 18 வயதிற்கு கீழுள்ள சிறார்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது அதிகரித்துள்ளது. இவர்களின் அதிவேகத்தால் விபத்துக்களும் அதிகரிக்கும் நிலையில்,இதனை பெற்றோர் கண்காணிப்பது அவசியமாகிறது.மேல்நிலைப் பள்ளி மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் கோடை விடுமுறையில் உள்ளனர். மேல்நிலை மாணவர்கள் குறிப்பிட்ட நாள் இடைவெளியில் மட்டுமே தேர்வு எழுதுகின்றனர். பள்ளி நடக்கும்போதும் மேல்நிலை மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்தது. சில பள்ளிகளில் இதனை கண்டுகொள்ளவில்லை. இது மாணவர்கள் பள்ளிகளுக்கு இரு சக்கர வாகனங்களில் வருவதை ஊக்குவித்தது போன்று உள்ளது. பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது தவறு எனபெற்றோரை வரவழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பிய நிகழ்வுகளும் நடந்தன. அதிலிருந்து சில நாட்கள் சிறுவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுவது குறைந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது. இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப இவர்கள் இரு சக்கர வாகனங்களை அதிவேகத்தில் ஓட்டி விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. மாவட்டத்தில் நான்கு மாதங்களில் 15-க்கு மேற்பட்ட சிறார்கள் இரு வாகனங்கள் ஓட்டி விபத்தில் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. சிறார்களுக்கு பெற்றோர் போதிய அறிவுரை வழங்குவதோடு , மாவட்ட போலீஸ் நிர்வாகமும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.............போதியளவில் னவிழிப்புணர்வுஆண்டுதோறும் பள்ளி அளவில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. போலீசாரும் இதில் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் மனது வைத்தால் மட்டுமே சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவது தடுக்க முடியும்" என்றார்.செல்வம் ,மோட்டார் வாகன ஆய்வாளர் , வத்தலங்குண்டு.............
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!