புதிய தெரு பெயர் பலகையால் குழப்பம்
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளும், இரண்டு ஆண்டுக்கு முன், மக்கள் தொகை அடிப்படையில், வார்டு வரைமுறை செய்யப்பட்டது. சமீபத்தில், முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இருந்து, வார்டு வரைமுறை அமலுக்கு வந்தது. இதில், பெரும்பாலான வார்டுகளில், அதன் எண் மாறியது.
இதனால், ஒவ்வொரு தெருக்களில் உள்ள தெரு பலகைகளில், வார்டு வரைமுறை அடிப்படையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, துரைப்பாக்கம், வி.பி.ஜி. அவென்யூ உள்ளது.இதில், 3வது தெருவில், வி.பி.ஜி., என்பதற்கு பதில், 'வி.ஜி.பி., அவென்யூ 3வது தெரு' என உள்ளது. இதனால், பகுதிமக்கள் மிகவும் குழப்பம் அடைகின்றனர்.மேலும், கால்டாக்சி, உணவு வினியோகம், தபால், கூரியர் உள்ளிட்ட சேவைகளுக்கு வருபவர்கள், தெரு பெயர் குழப்பத்தால் திணறுகின்றனர். தெரு பெயர் குளறுபடியை போக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!