கோவையில் 22ல் எஸ்.பி.பி., இசை விழா
கோவை;மறைந்த பாடகர் எஸ்.பி., பாலசுப்ரமணியத்தை கொண்டாடும் விதமாக இன்னிசை நிகழ்ச்சி, வரும், 22ம் தேதி கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்களை எஸ்.பி.பி.சரண், யுகேந்திரன், எஸ்.பி.சைலஜா, 'சூப்பர் சிங்கர்' அனு ஆகியோர் இணைந்து, 'செலிப்ரேஷன் டூ எஸ்.பி.பி.,' என்ற தலைப்பில் பாடுகின்றனர். மே 22ம் தேதி ஞாயிறு மாலை, 6:15 மணி முதல், கோவை அவிநாசி சாலை, ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில், 'முரளியின் மவுனராகம்' என்ற தலைப்பில் இன்னிசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்நிகழ்வுக்கான டிக்கெட் www.bookmyshow.com இன்று இணையதளத்தில் கிடைக்கிறது. மேலும் நேரடியாகவும் டிக்கெட் வாங்கும் வசதி உண்டு. மேலும் விவரங்களுக்கு, 99620 21377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!