பாம்பு கடித்து சிறுமி பரிதாப பலி
ஸ்ரீபெரும்புதுார் : ஒரகடம் அருகே கட்டுவிரியன் பாம்பு கடித்து சிறுமி இறந்தார்.காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் தீபா, 15. ஒரகடம் அருகே உள்ள பண்ருட்டி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
பனையூரில் உள்ள குளக்கரையில் உள்ள வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த தீபா, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு தன் போர்வையில் பாம்பு உள்ளதை கண்டு கூச்சலிட்டார்.சந்தம் கேட்டு எழுந்த தந்தை நாராயணன், பாம்பை கம்பால் அடித்து கொன்றார். தீபாவை பாம்பு கடித்ததை அறியாமல், அவர் மீண்டும் துாங்கி விட்டார். காலையில், தீபா முகம் வீங்கிய நிலையில் வாயில் நுரை தள்ளி உயிருக்கு போராடியபடிதுடித்துள்ளார். இதை பார்த்த குடும்பத்தினர் தீபாவை எழிச்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பாம்பு கடிக்கு மருந்து இல்லாதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். செல்லும் வழியில் தீபா இறந்தார். ஒரகடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!